தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் கால எல்லை நீடிப்பு!

breaking
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினத்துடன் நிறைவடையவிருந்தது. எனினும், நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் விநியோகக் காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த காலஎல்லை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.