அமெரிக்கருக்கும் ஶ்ரீலங்கருக்குமான போர் ஜனாதிபதி தேர்தல்: ஹரீன் கருத்து

breaking
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கைவிடவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும் இடையிலான போராக மாறியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹரீன் பெர்ணான்டோ மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் மூன்றாவது பட்டியலிலும் கூட கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, அவர் இன்னமும் அமெரிக்காவின் குடிமகனாகவே உள்ளார். அந்தவகையில் கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இலங்கை ஜனாதிபதியாக செயற்பட முடியாது. மேலும் முந்தைய காலாண்டு அறிக்கையில், கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இருக்காத போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையில் நிச்சயமாக அது இடம்பெறும் என்று அவரது பேச்சாளர்கள் கூறியிருந்தனர்” எனவும் சுட்டிக்காட்டினார்.