திடீரென உண்ணாவிரதத்தில் குதித்த பிக்கு: திண்டாடப் போகும் கோத்தா தரப்பு

breaking
  கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரினால் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பாக 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை அவர் முன்னெடுத்துள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இதுவரை உள்ளடக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.