கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி, கரும்புலி லெப். வீரமணி, கரும்புலி லெப். செங்கண்ணன், கரும்புலி லெப். நல்லதம்பி, கரும்புலி லெப். கண்ணன், கரும்புலி லெப். ஜீவரஞ்சன் வீரவணக்க நாள் இன்றாகும். பூநகரி கூட்டுப் படைத்தளம் மீதான “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக யாழ். மாவட்டம் பலாலி சிறிலங்கா விமானப் படைத்தளத்தில் ஊடுருவி 11.11.1993 அன்று மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி, கரும்புலி லெப். வீரமணி, கரும்புலி லெப். செங்கண்ணன், கரும்புலி லெப். நல்லதம்பி, கரும்புலி லெப். கண்ணன், கரும்புலி லெப். ஜீவரஞ்சன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பலாலி விமானப் படைத்தளத்திற்குள் 11.11.1993 அன்று ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு அணி படைத்தளத்தினுள் தாக்குதல்களை நடாத்தி சிறிலங்கா படையினரை நிலை குலையவைத்து “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையின் வெற்றிக்கு வழியேற்படுத்தியது.     தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”