தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த மாவீரர்கள் .!

breaking
தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் இந்த வரிசையில்     அப்துல் ரவூப் ,  முத்துக்குமார் என 20 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தீக்கிரையாக்கி தமிழர்களின் உரிமைக்காக உயிர்விட்டுருக்கும் அதேவேளையில் களத்தில் ஆயுதம் தாங்கிப் போராடியும் தமிழக இளையோர் யுவதிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இறுதிவரையிலான போரில் எத்தனை தமிழக மாவீர்கள் விதையானார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை எனினும் ஒரு கரும்புலி. இரு பெண் மாவீர்கள் உற்பட 14 தமிழக மாவீர்களின் விவரங்கள்   இங்கே தருகின்றோம் பிரிவு: கரும்புலி நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்:செங்கண்ணன் இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர் ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்) வீரப்பிறப்பு: 25.01.1975 வீரச்சாவு: 11.11.1993 நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: உமா இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 27.05.1972 வீரச்சாவு: 11.12.1999 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மணியரசி இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி ஊர்: தமிழகம். வீரப்பிறப்பு: 02.02.1977 வீரச்சாவு: 19.04.1996 நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: பத்மநாபன் இயற்பெயர்: பி.பத்மநாபன் ஊர்: திருச்சி, தமிழகம். வீரப்பிறப்பு: 27.07.1963 வீரச்சாவு: 16.03.1988 நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுனில் இயற்பெயர்: கதிரவன் ஊர்: தமிழகம். வீரச்சாவு: 11.04.1988 நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்) இயற்பெயர்: முத்தையா இராமசாமி ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 23.07.1962 வீரச்சாவு: 11.12.1991 நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: உதயசந்திரன் இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர் ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 05.05.1969 வீரச்சாவு: 09.06.1992 நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு பிரிவு: கடற்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: ஈழவேந்தன் இயற்பெயர்: துரைராசன் குமரேசன் ஊர்: தமிழ்நாடு. வீரப்பிறப்பு: 25.05.1969 வீரச்சாவு: 20.11.1992 நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சச்சு இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த் ஊர்: பியர், இந்தியா. வீரப்பிறப்பு: 04.09.1975 வீரச்சாவு: 20.12.1992 நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்) இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 01.01.1966 வீரச்சாவு: 13.05.1996 நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு நிலை: கப்டன் இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு) இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 31.05.1975 வீரச்சாவு: 19.05.1996 நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: கப்டன் இயக்கப் பெயர்: குற்றாளன் இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 08.08.1969 வீரச்சாவு: 16.07.1996 நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: சுதா இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன் ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு வீரப்பிறப்பு: 28.10.1980 வீரச்சாவு: 05.07.1999 நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: குருசங்கர் இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன் ஊர்: தமிழகம் வீரப்பிறப்பு: 18.04.1973 வீரச்சாவு: 25.07.1996 நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது