ஸ்டாலினை சந்தித்த சிங்கள சேவகர் ராகவன்.?

breaking
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து சென்னைக்கு வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்ட தினமான நேற்று  முன் தினம் அதன்வழியாக சென்னைசென்ற சிங்கள ஆளுநர் சுரேன் ராகவன்  சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலையம் சென்று தமிழக எதிர்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்ராலினுக்கும் இடையில்சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாகவும் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராகவன் குறிப்பிட்டார். அத்தோடு ஏற்கனவே ஈழத்திற்கு வந்திருந்த பாரதிராஜாவின் நட்பு இருந்ததினால் அவரையும் நேரில் சென்று ஈழ சினிமாவை கட்டிஎழுப்ப வேண்டுகோள் வைத்துள்ளார்.