ஜனாதிபதி தேர்தல் சமூக வலைத்தளங்களுக்கு தடை.?

breaking

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. நாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. முதல் முறையாக கார்டு போர்டுகளினாலான வாக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரசாங்க அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிப்பர். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த முறை வாக்குச்சீட்டு பெரிதாக உள்ளதால், வாக்களிப்பு ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சமூக வலைத்தளங்களில் போலியாக பிரசாரங்கள், வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையிலான பிரசாரங்கள், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமக்கு தொடர்ந்தும் முறைப்பாடு கிடைக்கப்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான போலி பிரசாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறுகின்றார்.