பூமிக்கடியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகால கோவில் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?..!!!

breaking
பெரு நாட்டின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ எனுமிடத்தில் 3000 ஆண்டுகள் கால பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோவிலுக்குள் கிடைத்துள்ளன. 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோவிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன. கலை நுட்பம் மிக்க கைவினை வல்லுனர்களான chimu இனத்தவரின் பண்பாட்டு அடையாளமாக இக்கோவில் விளங்குகிறது. அவர்கள் தண்ணீரை கடவுளாக கோவில் கட்டி வணங்கியுள்ளனர். இதே போல் சிந்தி இன மக்களும் ஜூலே லால் என்று கடல் தேவனை வணங்குவதும் மரபில் உள்ளது தெரியவந்துள்ளது