10 ஆண்டுகள் கடந்த போராட்டம் 1000ம் நாட்களுக்குள் முடக்கப்படுவது ஏன்!

breaking
10 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் தாயகத்தில்தொடர்ந்து வருகிறது குறிப்பாக 2009ம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் இருந்து இன்று வரை சிங்கள அரசாலும் ஒட்டுக்குழுக்களாலும் காணமல்ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை தேடி அவர்களது போராட்டம் ஆரம்பித்திருந்தது. குறிப்பாக லலித் மற்றும் குகன் என்னும் இரு சிங்கள மனிதஉரிமைச்செயற்பாட்டளர்கள் 2009ம் இன் இறுதிகாலப்பகுதியில் காணமல்போனோர் தொடர்பான தகவல்களை திரட்ட ஆரம்பித்தனர் அதன் பின் 09.12.2011ம் ஆண்டு கோத்தபாய ராஐபக்சவினால் காணமல் ஆக்கச்செய்யப்பட்டனர்.   இவ்வாறு பிற்காலங்களில் ஒரு ஒழுங்கமைக்ப்பட்ட போராட்டமாக இந்த காணமல்போனோர் போராட்டம் மாற்றம் பெற்றது. 2013ம் ஆண்டு 10ம் மாதம் 12ம் திகதி காணமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தின் இயக்குனர் சுந்தரம் மகேந்திரன் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார் இவ்வாறு கடுமையாக அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தம் உறவுகளை தேடி அந்த மக்கள் போராடினார்கள். குறிப்பாக 2011ம் ஆண்டு டிசம்பர் போராட்டத்துக்காக யாழ்ப்பாணம் வந்த மக்கள் சிறிலங்கா பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த ஐநாவின் மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் 6000ம் காணமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் கையளிக்கப்பட்டன அதுமட்டுமின்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. அதன்பின் 2013ம் ஆண்டு இலங்கை வருகைதந்த டேவிட் கமரூன் யாழ்நூலகம் வருகை தரும் போதும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பலதடவைகள் கொழும்பு கொட்டைமுன் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. இவ்வாறு பத்து ஆண்டுகளாக தமது பிள்ளைகளை,கணவனை,தாய்,தந்தை,சகோதர்கள் என தேடிவந்த 52 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறு ஓய்வின்றி 10 ஆண்டுகளாக போராடும் இம்மக்களின் போராட்டம் வெறும் 1000ம் நாட்களுக்குள் முடக்கப்படுவது அம்மக்களின் போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.அதுமட்டுமின்றி நல்லாட்சி அரசு என சொல்லித்திரியும் மைத்திரியின் ஆட்சியை வெள்ளையடிக்கும்பார தூரமான விளைவையும் அது விதைத்து நிற்கும் என்பதே களயதார்த்தம்.