கோத்தாவின் ஆட்கள் தாக்கினால் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்

breaking
  ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வன்முறைக்கு முகம் கொடுக்கும் தமது ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்திற்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டு, தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது ஐ.தே.க கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஐ.தே.க ஆதரவாளர்கள் தாக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் உருவாக்கிய அமைதியான மற்றும் நியாயமான சூழலைப் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கு பொறுப்பானவர்கள் தவறிவிட்டார்கள் என்பது துன்பகரமானது என்று அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார். ஐ.தே.கவை ஆதரித்த, சஜித்திற்கு வாக்களித்த மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல், மிரட்டல் மற்றும் வன்முறைக்கு ஆளாகாமல் பாதுகாப்பது கட்சியின் கடமை என குறிப்பிட்டுள்ள அவர், அப்படியான நெருக்கடியை சந்திப்பவர்கள் கட்சி தலைமையகமான சிறிகோத்தாவை தொடர்வுகொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. அபாயத்தை எதிர்கொள்பவர்கள் 011-2889378 மற்றும் 077-9215299 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழியாக தொடர்புகொள்ள முடியும்.