மலையக தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும்.!

breaking
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மலையகத்தின் சில பகுதிகளில்  தமிழ் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை  எடுத்து தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார். ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து நாடு  பூராவும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  அதிலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் எமது மக்கள் மீதான  தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் வெற்றியை கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை.  ஏனைய  இனத்தவருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்  செயற்படுதல் காட்டுமிராண்டிதனமான செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.