முல்லை. புதுக்குடியிருப்பில் 53 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது!

breaking
  வடதமிழீழழ் : முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் 53 கிலோகிராம் வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று (19) இவர் கைதானார். கைதானவரிடமிருந்து 53 கிலோ கோர்டைட் ரக குறைந்த சக்தியுடைய வெடிமருந்து மீட்கப்பட்டது. சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடந்து வருகிறது.