தானாகவே கலையும் கோத்தாவின் நிழல் அமைப்புகள்

breaking
  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். இனியும் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பொதுபலசோன அமைப்பையும் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.