மாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.!

breaking
ஒரு இனத்தின் இருப்பு அதன் பாதுகாப்பில் உறுதிசெய்யப்படுகின்றது. உலக வரலாற்றை நாம் பார்க்கும்போது, ஒரு இனத்தை இன்னுமோர் இனம்ஆளுமைக்குட்படுத்த முனையும்போது, அங்கே போர் இடம்பெற்றுள்ளது.இவற்றை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். இனங்களின் வரலாறுகள், அவ் இனங்களில்இருந்து தோற்றம் பெற்ற மாவீரர்களின் இரத்தத்தாலும்அர்ப்பணிப்பாலும் எழுதப்பட்டுள்ளன. அவர்கள்வாழ்ந்த வாழ்வு மற்றவர்கட்கு முன்னுதாரணமாக அமைநதது. களத்தில் முன்நின்று போராடி எதிரியை
அழித்த வரலாற்றின் உதாரணபுருசர்கள் இவர்கள்   கடந்த   ஐந்து நூற்றாண்டுகளாக ஈழத்தமிழனித்தின்வரலாறு இருண்டதாகவும் அந்நிய ஆளுகைக்குட்பட்டதாகவும் இருந்துள்ளது.
ஈழத் தமிழ் மக்களும் அடிமைகளாக, இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்ந்தது மட்டுமல்லாது தமது பிரதேசங்களை இழந்து வாழ்விழந்தவர்களாக தாய்நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் எமது இனத்தைத் தலைமை
தாங்கியவர்களிடம் நீண்டகால அரசியல் சிந்தனையும்ஆளுமையும் இருக்கவில்லை.
அதனால் அந்நிய அடக்குமுறைகளிலிருந்து எம்மை விடுவிக்க, எம்மைப் பாதுகாத்
துக்கொள்ள தயாராக இருக்கவில்லை , தயார்ப்படுத்தப்படவில்லை. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வீரவரலாற்றை நினைவில் நிறுத்த எம்மிடம் கடந்த ஐந்துநூற்றாண்டுகளாக நினைவுச்சின்னங்களோ, நிகழ்வுசுளோ இருக்கவில்லை தற்போதுதான், அரசியல் , இராணுவ ஆளுமையுள்தலைமை எம்மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.
நாம்இன்று எம்மை விடுவிக்க தர்மப் போரினை அந்நியசிங்கள இராணுவத்துடன் நடாத்திக்கொண்டிருக்கிறோம். இந்தப் போரில் நாம் வெற்றிபெறப் போவதுஉறுதி.
நாம் விடுதலை அடையப் போவது உறுதிகடந்த நூற்றாண்டுகளில் நாம் இழந்துவிட்ட
சுதந்திரத்தை பெறப்போகும் எமது தலைமுறை அடுத்துவரும்எமது சந்ததியையும் பாதுகாப்புடன் வாழவைக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகின்றது. தொலைந்து
போன  இறைமையை மீளப் பெறும் நாம் அதை நிரந்தரமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை மிகப்பெரியதாகும்.
இன்றைய தலைமுறையும் எதிர்காலச் சந்ததியும்பாதுகாப்புடன் வாழவேண்டிய
சூழ்நிலையினை தோற்றுவிக்க வேண்டியது எமது கடமையாகின்றது.இவ் உணர்வுகளை,
இவ் உணர்வுகளால் தோற்றம்பெற்ற மாவீரர்களின் நினைவுகளால்தான் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இவர்களின் செயல்கள்தான் எமது வரலாற்று அத்தியாயத்தின் தலைப்புக்களாகும்.
சுதந்திர உணர்வுகளுடன் கிளர்ந்தெழுந்து எதிரியுடன் போராடி, தமது உதிரத்தாலும் உயிராலும் எமதுபாதுகாப்பை நிலைநிறுத்தியவர்களின், உணர்வுகளும்
நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இம் மாவீரர்களின் நினைவுக் கற்கள் எமது தேசத்தின் அத்திவாரக் கற்களாகின்றது. இவர்களின் உறுதிஎம்மைநெறிப்படுத்துகின்றது.
களத்தில் இவர்கள் காட்டிய வீரம் எம்மைப் பலப்படுத்துகின்றது. இவர்களின்
இலட்சியம் எமது வெற்றியாகின்றது. உறுதிமிக்க எம்தலைவரின் வழிகாட்டலில் எமதுதேசம் விடுதலை பெறும்.
-அனைத்துலகச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
-சூரியப்புதல்வர்கள் 1997
மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து