பிரித்வி-2 ரக ஏவுகணைகளின் இரவுநேரப் பரிசோதனை வெற்றி..!

breaking
இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரித்வி-2 வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது. பிரித்வி-2 ஏவுகணையில் தற்போது சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பிரித்வி-2 ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும். இது 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது. அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும் இந்த ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயங்கும் இரட்டை என்ஜின்கள் கொண்டது. இதனால், 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது. பிரித்வி-2 ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டது. எனினும், அடிக்கடி நவீனமாக்கப்பட்டு அவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரித்வி-2 (கோப்பு படம்) குறிப்பாக பகல் வேளைகளில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இரு பிரித்வி-2 ரக ஏவுகணைகள் இன்றிரவு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசா மாநில கடல் பகுதியில் உள்ள ஏவுத்தளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைகளின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. 300 கிலோமீட்டர் தூரத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை அந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கி அழித்தன என இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.