பாலம் உடைந்து சேதம் ; முல்லைத்தீவில் 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதி

breaking
முல்லைத்தீவு துணுக்காய் அம்பலப்பெருமாள் குளம் பிரதான வீதியின் கோட்டை கட்டிப்பாலம் உடைந்துள்ளதால் நான்கு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு துணுககாய்பிரதேசத்திற்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் கோட்டைகட்டிய குளம் தென்னியன்குளம் உயிலங்குளம் ஆகிய கிராமங்களுக்கான பிரதான வீதியாகக் காணப்படுகின்ற துணுக்காய் அக்கராயன் வீதியின் கோட்டைகட்டிய குளம் பகுதியில் அமைந்துள்ள பாலம் நேற்று முன்தினம் முதல் உடைவு ஏற்பட்டுள்ளது. குறித்த காலத்தில் நேற்றும் பாரிய உடைவு ஏற்பட்டமையால் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. ஆம்பலப்பெருமாள்குளம் கோட்டைகட்டிய குளம் தென்னியங்குளம், உயிலங்குளம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த ஆயிரத்திற்கும்மேற்பட்டகுடும்பங்கள் அக்கராயன் மற்றும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் நகருக்கு நமது தேவைகளுக்காகச் சென்று வருவதற்கும் இவ்வீதியையே பயன்படுத்துகின்றனர். இதேவேளை அம்பலப்பெருமாள்குளம் கோட்டை கட்டியகுளும், ஆகிய கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும்கூட தமது தேவைகளுக்காக மல்லாவி துணுக்காய் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கும் இவ்வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர் இந்தநிலையில் குறித்த பாலமானது உடைந்தநிலையில் காணப்படுவதால் இதனூடாக போக்குவரத்துக்கள் முழுமையாகத் துண்டிக்கப்படும் அபாய நிலை காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.