தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை ...

breaking

பெருமை கொள் தமிழா 

ஸ்ரெல்த் Stealth இது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு.

கரும்புலி படகினை ராடாரில் தென்படாதவாறும் வேகம் கூடுதலாகவும் தயாரிக்க வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் கருத்திற்கும் சூசை அண்ணா வின் கருத்திற்கும் இணங்க படகின் வடிவமைப்பு ஆரம்பமானது . அக்காலகட்டத்தில் வெளியான ஆங்கில சஞ்சிகையை V மாஸ்டர் மொடல் யாட்டிற்கு கொண்டுவந்தார் அதில் ஸ்ரெல்த் விமானத்தின் படங்களும் சில குறிப்புகளும் இருந்தது Stealth aircraft specifically designed around stealth technology it's totally invisible to radar . ஆம் அந்த விமானம் தன்னை முழுமையாக ராடாரி இருந்து மறைத்துக்கொள்ளும் , அதன் படத்தைப் பார்த்து படகின் அடிப்பாகத்திற்கான அனியம் கூராகவும் கடயார் tunnel hull வடிவிலும் வரைபடம் வரையப்பட்டு அடிப்பாகத்தின் சிறிய 

8"  மொடல் 

P மேஸ்த்திரியால் செய்யப்பட்டது.



 அதற்கான கன்வோள்  Gunwale ஸ்ரெல்த் விமானத்தின் வடிவத்திற்கு   ஏற்ப கோணங்கள் வைத்து காட்போட்டில் சிறிய மொடல் செய்து ரொச்லைட் ஒளியில் கோணங்கள் எவ்வாறு கதிர் வீச்சினை முறிக்கின்றது என்பது அவதானிக்கப்பட்டு பின் அதில் திருத்தம் செய்து ஒட்டுப்பலகையில் சிறிய மொடல் செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் தொழில் நுட்ப வசதிகளோ கணனி வசதியோ இருக்கவில்லை 

V மாஸ்டர் இன் வழிநடத்தலில் வரைபட பிரிவு பெண் போராளிகள் ஸ்ரெல்த் 16' காண படங்கள் வரைய ,P மேஸ்த்திரியும் அவரது வேலை ஆட்கள் 4 பேரும் மொடல் யாட் பெண் போராளிகளும் சேர்ந்து சுமார் ஒரு மாதகாலத்தில் பலகையும் ஒட்டுபலகையும் கொண்டு மொடல் உருவானது. அதன் பின் பைபர் கிளாஸ் யாட்டிற்கு டொக்கில் ஏற்றி அனுப்பப்பட்டது.

அங்கு பைபர் கிளாஸ் வேலையி அனுபவமும் திறமையும் மிகுந்த பெண் போராளியின் தலைமையிலான குழுவுடன் மொடல் யாட்டில் இருந்து சென்ற பெண் போராளியும் இனைந்து மோள்ட்டிற்கான தச்சு வேலை செய்ய 20 நாட்களில் மோள்ட்  மொடலில் இருந்து கழட்டப்பட்டு பின்னர் 3 நாட்கள் சான் பேப்பர் போட்டு அதில் உற்பத்தி செய்வதற்கு தாயார் ஆனது .

அதே குழுவினரே படகினையும் செய்தார்கள் 25 நாட்களில் முதலாவது ஸ்ரெல்த் இரை தேடும் பறவை போல வர்ணம் பூசப்பட்டு தணிகை எனும் கரும்புலி கப்டன் தணிகை யின் பெயர் கொண்டு கம்பீரமாக நின்றது . பின் தொழில் நுட்ப பிரிவு ஆண் போராளிகளால் அதற்குரிய எஞ்சின் பூட்டி வயரிங் வேலையும் செய்து படகு வேலை முடிவடைந்தது.

எந்தவொரு மொடலில் இருந்து மோள்ட் எடுத்து முதலாவதாக செய்யப்படும்  படகு தமிழரின் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து படகிற்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து தீபம் காட்டிய பின்னரெ யாட்டிலிருந்து அனுப்பி வைப்பது வழக்கம் அது போலவே தணிகை படகிற்கும் செய்தார்கள் அவ்வாறு மாலையுடன் அழகாக இருந்த படகினை எமது தேசிய தலைவரும்  சூசை  அண்ணவும் வந்து பார்வையிடனர். ஸ்ரெல்த்தை பார்த்து சந்தோசப்பட்ட அண்ணா படகு செய்தவர்களையும் வெள்ளோட்டத்திற்கு ஏற்றிச் செல்லுமாறு கூறினார்.

தணிகை படகு வெள்ளோட்டம் வட்டுவாகல் கடலில் படகு செய்தவர்களுடன் நடந்தது .

சுமையுடனும் சுமை இல்லாமலும் வேகம் கணிக்கப்பட்டது 45 - 50 knots  ஸ்ரெல்த் கொடுத்த வேகம் 50 - 55 knots படகு வடிவமைப்பின் போது கவனிக்கபடும் முக்கிய விடயம் மிதவை மையம் மற்றும் புவியீர்ப்பு மையம் இவை இரண்டும் ஒரே கோட்டி வரவேண்டும் அவ்வாறு வருவது மிகவும் குறைவு ஆனால் ஸ்ரெல்த்திற்கு இரண்டு மையமும் கடயாரில் இருந்து 3' 6" தூரத்தில் அமைந்ததால் அது 360°  சுழன்று வந்தது, அத்துடன் ராடாரில் இருந்த தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டது

இது கடற்புலிகளின் வெற்றிகரமாக தயாரிப்பு. 

தணிகை படகின் மோல்ட்டிலும் உற்பத்தியிலும் பங்குபற்றி கடைசிவரை படகுக்கட்டுமானத்தில் இருந்து இறுதி யுத்தத்தில் வீரகாவியம் ஆன லெப் கேணல் சோபா மற்றும் லெப் கேணல் சுடர்மனி ஆகியோரிற்கு எமது வீரவணக்கம்


எழுத்துருவாக்கம் - மங்கை படகுக்கட்டுமானம்