
யாழ் மாவட்டத் தளபதி
கேணல் கிட்டு
சதாசிவம் கிருஸ்ணகுமார் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:02.01.1960 - வீரச்சாவு:16.01.1993
நிகழ்வு:சென்னை துறைமுகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக்கடற்படையினர் கைது செய்ய முற்பட்டவேளை தாம் பயணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு
கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா?
தெரியாது!
சதாசிவம் கிருஷ்ணகுமார்?
தெரியாது!
கிட்டுவைத் தெரியுமா?
ஓ தெரியுமே!
யார் அவர்?
கிட்டு மாமா!
தமிழீழ சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா.
ஓகஸ்ட் 1994 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட தளபதி கேணல் கிட்டு சிறுவர் பூங்கா காணொளி இணைப்பு
தளபதி கேணல் கிட்டு சிறுவர்களின் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர் தமிழீழ சிறுவர்களின் உளவளத்தை மேம்படுத்த நிறைய திட்டங்களை முன்னெடுத்தார்
பகைவனே நீ பற்றவைத்தது
வெறும் அடையாளச் சின்னம் அல்ல.!
எம் இலட்சியக் கனல்..
உனது கையைக்கொண்டே அதனை பற்றவைத்துள்ளார் எங்கள் தளபதி.
எம் இளைய தலைமுறை எங்கள் தளபதி கிட்டுவை இன்றிலிருந்து தேடத்தொடங்கிவிட்டது.