22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

breaking

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ  தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.


யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர்.

இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.

அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு  அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை  தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன்

ஆலோசனைகளையும் வழங்கினார்.

பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன.

அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில்  சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார் இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009)அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள 

படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள்  காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது   தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 )இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது.அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும்.இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான் அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன்  அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில்.ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை

அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார்.

இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து.

இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு.

கப்டன் பவான்( ஐயா).

லெப்ரினன்ட் கிர்மானி.

2ம் லெப்டினன்ட் குணம்.

2ம் லெப்ரினன்ட் குலம்.

வீரவேங்கை தாஸ்.

வீரவேங்கை சுவர்ணன்.