தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது.

breaking

தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து தமிழீழப் பாடல் இணையம் வெளிவருகிறது.


நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களது 33வது ஆண்டு நினைவுநாளான இன்று தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து இணையத்தளத்தில்
வெளிக்கொணர்வதில் பெருமையடைகின்றோம்.

எமது தாயக விடுதலையின் ஆரம்ப காலத்தில் தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைப்படைப்புகள்,
குறிப்பாக எழுச்சிமிகு பாடல்களே அதிமுக்கிய கருவியாக இருந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு
அமைவாகப் பல்வேறு பாடல் இறுவெட்டுகள் உருவாக்கம் பெற்றன. இவை உலகத்தமிழர்கள் அனைவரிடமும் கொண்டுசெல்லப்பட்டன.

போராளிக் கலைஞர்கள்,தாயகக் கலைஞர்கள், தமிழகக்கலைஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற கலைஞர்கள் என எல்லோரதும்
உயரிய அர்ப்பணிப்பால் உருவாக்கம் செய்யப்பட்ட தமிழீழப் பாடல்கள் அனைத்தும் மக்களிடம் சென்றடையவிடாது தடுப்பது எதிரியின் திட்டமாக
இருக்கிறது. இதனூடாக எமது அடையாளங்களை மறைத்தும் சமூக வலைத்தளங்களிலிருந்து அவற்றை நீக்கியும் தடைகள் ஏற்படுத்தியும் தமிழ்
மக்களிடையே ஒரு கட்டமைக்கப்பட்ட உளவியல் யுத்தம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இத்தகைய சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழீழ விடுதலைப் பாடல்களைத் தொகுத்து இவ் இணையம் வெளிவருகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளினால் அதிகாரபூர்வமாக வெளியீடுசெய்யப்பட்ட தாயக விடுதலைப் போராட்டக் களத்தின் வெற்றிச் சமர்
நினைவுகளில் வெளியாகிய பாடல்கள்,கரும்புலிகளின் வீரத்தை சிறப்பிக்கும் பாடல்கள்,தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்த மாவீரர்கள்
நினைவு சுமந்த பாடல்கள்,தமிழீழத் தேசியத்தலைவரின் வீரம் கூறும் பாடல்கள்,ஈகையர் பாடல்கள், தாயகம் மற்றும் புலம்பெயர் வெளியீடுகள்,
ஏனைய எழுச்சிப்பாடல் இறுவெட்டுகள் , மற்றும் பின் பாடல் இசை( karaoke) எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

" விடுதலை உணர்வு சுமந்த பாடல்களைக் காற்றில் உணர்வுகளுடன் வீசச் செய்வோம்
உறுதியுடன் தமிழீழ விடுதலையை நிலைபெறச் செய்வோம் "

தமிழீழக் கானங்களைத் தாங்கி காற்றில் போர்ப்பறையாக உலாவரும்


தமிழீழப்பாடல் இணையம்



தமிழீழப்பாடல் இணையம் https://eelasongs.com/








குறிப்பு :-
உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
[email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு
கொள்வதனூடாக எமக்குத் தங்களின் கருத்தைத் தெரிவிக்கலாம்.
-வெளியீடு :வெளியீட்டுபிரிவு ,அனைத்துலகத்தொடர்பகம்.